ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்த கூட்டு எதிர்க்கட்சி முயற்சி

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை தோற்கடிக்கும் நோக்கில், அந்த யோசனைக்கு எதிரான ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கத்தில் அரசாங்கம் இந்த யோசனையை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“இதனை தேர்தலை ஒத்திவைக்கும் பொறி என நாங்கள் கருதுகின்றோம். அதிகளவில் அதிகாரத்தை பரவலாக்கினால், நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது.

இதனை தோற்கடிக்க இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியுமா என்பதை அறிய ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எண்ணியுள்ளோம்” எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை நாட்டுக்கு புதிய அரசியலமைப்புச் சட்டம் தேவை என அனைவரும் கூறியுள்ளதாக பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

சகல தலைவர்களும் அனைத்து தேர்தல்களிலும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதாக வாக்குறுதியளித்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers