ரணில் தொடர்பில் பெண் உறுப்பினர் சொல்லும் தகவல்!

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது ஜனாதிபதி பதவி கனவை நனவாக்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி அதிகரித்துள்ளதுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையை நியமிக்கும் போது சஜித் பிரேமதாசவுக்கு மறைமுகமாக உதவி எவருக்கும் பிரதியமைச்சர் பதவிகளை கூட வழங்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சரத் பொன்சேகாவும் தெரவப்பெருமவும் போரிட்டு கொண்டனர். ரவி கருணாநாயக்கவுக்கும் மங்கள சமரவீரவுக்கும் இடையிலும் மோதல் உள்ளது. இவ்வாறான நிலையில், ரணில் விக்ரமசிங்க தனது ஜனாதிபதி கனவை நனவாக மாற்ற கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ரணில் - சஜித் மோதல் உச்சமடைந்துள்ளது எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.