நாட்டில் உத்தியோகபூர்வமற்ற பிரதமராக சுமந்திரன் எம்.பி

Report Print Steephen Steephen in அரசியல்
195Shares

நாட்டில் உத்தியோகபூர்வமற்ற பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இருந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஹொரணையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்கவுக்கு பின்னால் இருந்து சுமந்திரனே இயக்குகின்றனர். அவர் கூறுவதை பிரதமர் அமுல்படுத்தி வருகிறார்.

நண்பர்களுடனான நட்பு காரணமாக சுமந்திரன் ஊடகங்கள் இருப்பதை மறந்து விட்டு நான் அவற்றை செய்கிறேன் என்று வடக்கிற்கு சென்று கூறுகிறார்.

அரசாங்கம் தமது கைகளில் இருப்பதாகவும் எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

இதனால், அரசாங்கத்தின் ஊடாக சமஷ்டிக்கும் அப்பால் சென்ற அதிகாரங்களை கொண்ட அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.

இலங்கையின் உண்மையான தலைவர் சுமந்திரன் என்பதை இதற்கு முன்னரும் நான் கூறினேன்.

தற்போது அவரே தனது வாயால் அதனை கூறியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.