மகிந்தவுக்கு அழைப்பு விடுக்கும் சுதந்திரக் கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சரத் கோங்காகே ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டதை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதில்லை எந்த சிக்கலும் இல்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகிந்த ராஜபக்சவின் தந்தையும் இணைந்து ஆரம்பித்த கட்சி என்பதால், அவருக்கு தான் இந்த அழைப்பை விடுப்பதாகவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.