ரணிலும், சுமந்திரனும் எடுக்கும் தீர்மானங்களை அமுல்படுத்த இடமளிக்க போவதில்லை: மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் இரகசியமாக எடுக்கும் தீர்மானங்களை செயற்படுத்த இடமளிக்க போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பெலியத்த - நாகுஹெழுகமுவ மெத்தெனிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச,

அரசியலமைப்பு சட்டத்தை காணாதவர்கள் நாட்டை பிரிக்க போவதாக கூறுவதாக தெரிவிக்கின்றனர். அரசியலமைப்பு விடயத்தை அவர்களே கூறினர்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அரசியலமைப்புச் சட்டம் அல்ல என்கின்றனர். வரைவு அல்ல என்கின்றனர். சிலர் அதனை அரசியலமைப்புச் சட்ட வரைவு என்று கூறுகின்றனர்.

இதனை ரணில், சுமந்திரன் ஆகியோர் மட்டுமே அறிவார்கள். அவர்கள் இருவரும் இரகசியமாக எடுக்கும் தீர்மானத்தை அமுல்படுத்த முயற்சிக்கின்றனர். அதற்கு இடமளிக்க போவதில்லை.

சீன மொழியில் தான் பிரதமரின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட வேண்டும். நாட்டின் நிலைமையும் சீனாவுக்கு துறைமுகத்தை விற்பனை செய்ததையும் எழுதுவார்களா என்று தெரியவில்லை. நாட்டின் வளங்களை விற்பனை செய்தது குறித்து எழுதினால் நல்லது.

மூன்று வருடங்களாக கல்வியற் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. கல்விக்காக நிதியை செலவிடுவதாக அரசாங்கம் பொய் கூறுகிறது.

நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படுகின்றன.இதன் மூலம் ஆசிரியர்கள் உருவாவது நிறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் கல்வியை சீரழிக்க முயற்சிக்கின்றனர் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.