கொழும்பில் பொதுஜன பெரமுனவின் புதிய பிரிவு!

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நீதியான தேர்தலுக்கான தேசிய நடவடிக்கை மத்திய நிலையம் என்ற பெயரில் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இந்த பிரிவு பத்தரமுல்ல, போதிராஜ மாவத்தையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து துரிதமாக தேர்தலை பெற்றுக்கொள்ள தலையீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கல்களுக்கு எதிராக செயற்படவும் சட்ட ஆலோசனை வழங்கும் நடவடிக்கைகளும் இந்த மத்திய நிலையம் ஊடாக முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers