கூட்டு ஒப்பந்த விடயத்தில் பச்சோந்திகளின் பலத்தையும் குறைக்க வேண்டும்!

Report Print Thirumal Thirumal in அரசியல்

கூட்டு ஒப்பந்த விடயத்தில் பச்சோந்திகளின் தொழிற்சங்க பலத்தையும் குறைக்க வேண்டும் என்று அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

டயகம தோட்டத்தில் புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதில், கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

2019ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாகும். இந்த தேர்தல் ஆண்டில் எந்த தேர்தல் நடந்தாலும், அதற்கு முகங்கொடுக்க நாம் தயாராக வேண்டும்.

200 வருடங்களாக 8 அடி காம்பிராவில் வாழ்ந்து பழக்கப்பட்ட எமது மக்களுக்கு 2015ஆம் ஆண்டு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் 7 பேர்ச் காணியும் வழங்கி அதற்கான ஒப்பனையும் வழங்கப்பட்டு புதிய தனி வீடுகளையும் அமைத்து வாய்ப்பளித்துள்ளது.

இதை ஒருபோதும் மக்கள் மறந்துவிடகூடாது. இந்த அரசாங்கத்திற்கு வெளிநாடுகள் பல கடன்களை வழங்குகின்றனர்.

அந்த கடன்களை திருப்பியும் செலுத்தப்பட வேண்டும். ஆனால் இந்திய அரசாங்கம் நமக்கு கடன்களை வழங்குகின்றது. ஆனால் அதை திருப்பி செலுத்த வேண்டியது அல்ல.

வடக்கு, கிழக்குக்கு இந்திய அரசாங்கம் கூடுதலாக உதவிகளை செயடது வந்த நிலையில் மலையகத்திற்கும் உதவிகளை செய்கின்றார்கள். அந்தவகையில் வீடுகள், பாடசாலைகள் போன்ற பல்வேறு தேவைகளுக்கு இந்திய அரசாங்கம் நமக்கு உதவிகளை செய்கின்றார்கள்.

எமது அமைச்சின் மூலமாக எதிர்வரும் காலத்தில் 7 தொடக்கம் 8 வரையிலான கிராமங்களை திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற காத்திருக்கின்றது.

என்ன தான் வீடுகள் கட்டி கொடுத்தாலும், கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக வழங்கப்படும் சம்பள பிரச்சினையில் துரோகம் செய்து விடுகின்றனர்.

கூட்டு ஒப்பந்தத்தை விட்டு வெளியே வாருங்கள். கூட்டாக சேர்ந்து போராடுவோம். அதற்கு இசையாத தொழிற்சங்கங்கள் பொறிமுறையும் தேவை.

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக இவர்களுக்கு இருக்கும் ஆதாயம் காரணமாக இதை விட்டு வெளி வருவதற்கு இந்த பச்சோந்திகள் விருப்பமில்லை. கேட்டால் திகாவுக்கு அரசியல் தெரியாது என சொல்கின்றார்கள்.

இந்த பச்சோந்திகளின் தொழிற்சங்க பலத்தையும் குறைக்க வேண்டும். செத்தாலும் உங்களுக்காகவே சாவேன் என தெரிவித்த அமைச்சர் காசுக்கு துணைபோக மாட்டோம் எனவும் அமைச்சர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.