ஊழல் அரசியல்வாதிகளை மக்கள் விரும்புகின்றனர்: சுனில் ஹந்துன்நெத்தி

Report Print Steephen Steephen in அரசியல்
34Shares

ஊழல் அரசியல்வாதிகளை நிராகரிக்கும் மனநிலை நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் வளங்களை கொள்ளையிடும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கின்றது. மக்கள் தமது இந்த மனநிலையை மாற்றிக்கொண்டால் மட்டுமே நாட்டில் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.