அரசாங்கத்தில் இணைந்துக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இணைந்துக்கொண்ட விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, ஏ.எச்.எம். பௌசி ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை பியசேன கமகே மற்றும் லக்ஷ்மன் செனவிரத்ன ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.