புதிய அரசியலமைப்புச் சட்டம் தேவையில்லை என்பவர்கள் மாற்று யோசனையை முன்வைக்கட்டும்! ஹெரிசன்

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசியலமைப்புச் சட்டம் தேவையில்லை என கூறும் நபர்கள் நாடாளுமன்றத்தில் மாற்று யோசனையை முன்வைக்க வேண்டும் என அமைச்சர் பீ. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு யோசனை கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படவில்லை.

அரசியலமைப்பு வரைவும் நிறைவேற்றப்படவில்லை என்பது அரசியலமைப்புச் சட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

அரசியலமைப்புச் சட்டம் தேவையில்லை எனக் கூறும் பெரும்பான்மையானோர், நாட்டில் பல இடங்களில் கருத்துக்னள வெளியிடாது மாற்று வழியை தேட வேண்டும் எனவும் பீ. ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.