ரணில் தலைமையிலான அரசாங்கம் அதிகாரத்தில் இருக்க காணரம் என்ன?

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனநாயகத்தை பாதுகாக்க தேவையான நிறுவனங்களை வலுப்படுத்தியதன் காரணமாகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கம் அதிகாரத்தில் இருக்க முடிந்துள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தெனியாய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சுதந்திரமான நீதித்துறை, பொலிஸ் சேவை போன்றவற்றை ஏற்படுத்தி, அந்த நிறுவனங்களை வலுப்படுத்தியதன் காரணமாக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருக்கின்றது.

மேற்கொள்ள முடியாது போன பணிகள மேற்கொள்ளும் பொறுப்பு தற்போது அரசாங்கத்திற்கு உள்ளது எனவும் அமைச்சர் சாலக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.