கிளிநொச்சிக்கு விஜயம் செய்த வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று இரவு அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
புதிய ஆளுநராக பொறுப்பேற்று கொண்ட வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றார்.
இந்நிலையில் இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகமான அறிவகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இக் கலந்துரையாடலின்போது மாவட்டத்திலேயே செயலிழந்து காணப்படுகின்ற குறிஞ்சாத் தீவு உப்பளம் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம் போன்ற தொழிற்சாலைகளை உருவாக்கி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் விவசாயிகளுடைய நலன்களில் அக்கறை செலுத்துதல் விவசாயப் பண்ணைகளை விடுவித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்து வடமாகாண ஆளுநர்,
நீர்ப்பாசன திட்டத்திலேயே தமிழ் மக்களினுடைய ஒற்றுமை தொடர்பில் ஒரு சுமூகமான முடிவு பெற வேண்டும். அதற்கான முன் யோசனைகள் பற்றியும் நான் கேட்டிருக்கின்றேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்துகளை நாங்கள் கேட்டுள்ளளோம். மழை நீரை நம்பி இருக்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கு இது சாதகமாக அமைய வேண்டும் என்பதுதான் என்னுடைய முடிவாகும்.
அது போலவே அவருடைய முடிவும் அதுவாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன். படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பில் கேட்டபோது இந்த விடயங்களில் ஒரு சமரச முயற்சியை நடைபெறவேண்டும். பொறுமையுடன் செய்ய வேண்டிய ஒரு விடையமாகவும் காணப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.