வடக்கு ஆளுநரின் ஆலோசனையில் நாளை முல்லைத்தீவுக்குச் செல்கிறார் மைத்திரி!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தேசிய போதைப்பொருள் தடுப்பு - பாடசாலை வாரம்” ஜனவரி 21 முதல் 28 வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதற்கான ஆரம்ப நிகழ்வு நாளை (21) காலை 10 மணிக்கு முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற உள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் “போதையிலிருந்து விடுதலைபெற்ற நாடு” போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகின்ற

“தேசிய போதைப்பொருள் தடுப்பு - பாடசாலை வாரம்” ஜனவரி 21 முதல் 28 வரை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதுடன் இதற்கான ஆரம்ப நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குகிறார்.

இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை மேலும் பலப்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆலோசனையின் பேரில் வடக்கு மாகாணத்தின் பாடசாலைகளின் சுமார் 150,000 மாணவர்கள் நாளை காலை போதைப்பொருளுக்கு எதிரான உறுதியமொழியினை மேற்கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers