மீண்டும் மோதிக்கொள்ளும் ரணில் - மைத்திரி!

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் மீண்டும் மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பழைய முறையில் மாகாண சபை தேர்தல் நடத்துவதற்கு ஜனாதிபதி ஆயத்தமாகியுள்ளார். இதன் காரணமாகவே இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி குழுவினர் முதலாவதாக ஜனாதிபதி தேர்தல் ஒன்றிற்கு செல்வோம் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர். பழைய முறையில் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் 25 வீத பெண் பிரதிநிதிகளை உள்ளடக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

எனினும் புதிய மாற்றங்கள் மேற்கொண்டு தேர்தலை பிற்போட முடியாதென்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த விடயம் இரண்டு தரப்பிற்கும் இடையில் மோதலை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.