பயங்கரவாதிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலில்... மனம் திறக்கும் எதிர்க்கட்சி தலைவர்

Report Print Rakesh in அரசியல்

ராஜபக்ச குடும்பம் இந்த நாட்டில் குடும்ப ஆட்சி நடத்தவில்லை என்பதுடன், நாட்டை மீட்டெடுக்கவே பாடுபட்டது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த குடும்பத்திலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்கினால் அதிசயிக்க ஒன்றும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இந்த நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்க ராஜபக்ச குடும்பம் அயராது உழைத்தது. பயங்கரவாதிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலில் இருந்துகூட ராஜபக்ச குடும்பம் மயிரிழையில் தப்பியது.

ராஜபக்ச குடும்பம் இந்த நாட்டில் குடும்ப ஆட்சி நடத்தவில்லை. நாட்டை மீட்டெடுக்கவே பாடுபட்டது.

இந்தக் குடும்பத்திலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்கினால் அதிசயிக்க ஒன்றும் இல்லை. வெற்றிதான் எமது இலக்கு.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று இப்போதைக்குக் கூறமாட்டோம்.

எனினும், வெற்றியை உறுதிப்படுத்தும் பொருத்தமான வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நாம் களமிறக்குவோம்.

நாம் முன்னேற்றம் அடைய செய்த நாட்டை நாசமாக்கி கொண்டிருக்கும் ரணில் தரப்பினரை வீட்டுக்கு அனுப்பியே தீருவோம் என குறிப்பிட்டுள்ளார்.