மூன்று தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய முன்னணியே வெற்றிவாகை சூடும்: கிரியெல்ல

Report Print Rakesh in அரசியல்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர்தான் இது வரை பரிந்துரையில் உள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டதும், ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் பெயர் கட்சியால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று ஒரு தரப்பினரும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்னொரு தரப்பினரும், இந்த இரண்டு தேர்தல்களுக்கும் முன்னர் மாகாண சபை தேர்தலே நடைபெறும் என்று ஜனாதிபதியும் மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அரசியலில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் போட்டி காரணமாகவே இந்தக் கருத்துக்கள் மாற்றி மாறி வருகின்றன.

ஆனால், ஐக்கிய தேசிய முன்னணி எந்த தேர்தலையும் சட்டபூர்வமாக எதிர்கொள்ள தயாராகவுள்ளது. அதன் பங்காளி கட்சிகள் ஓரணியில் ஒற்றுமையாக உள்ளன. மேற்படி மூன்று தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய முன்னணியே வெற்றிவாகை சூடும் என்பது உறுதி.

நாங்கள் குறுக்கு வழியில் வந்து ஆட்சி செய்பவர்கள் அல்லர். நாட்டு மக்களின் ஆணைக்கிணங்கவே ஆட்சி செய்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers