பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை மின்சாரசபை

Report Print Kamel Kamel in அரசியல்

இலங்கை மின்சாரசபை 5000 கோடி ரூபாய் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டில் இலங்கை மின்சாரசபை இவ்வாறு 5000 கோடி ரூபாய் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை மின்சாரசபை, தனியார் துறையிடம் மின்சாரம் கொள்வனவு செய்வதே இவ்வாறு நட்டத்தை எதிர்நோக்க பிரதான காரணமென குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை எரிவாயுவை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தினை அமுல்படுத்த விடாது சிலர் தடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அரசியல்வாதிகளும், பொதுமக்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் மனோ கணேசன் கோரியுள்ளார்.