சிலர் கூறுவதில் உண்மையில்லை! புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்புக் குழுவின் தலைவர்

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை சட்டமூல வரைவு என சிலர் கூறுவதில் உண்மையில்லை என புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

அரசியலமைப்புச் சட்டவாக்க சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, அரசியலமைப்புச் சட்ட வழிக்காட்டல் குழுவுக்கு வழங்கிய அறிக்கையே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது எந்த வகையிலும் அரசியலமைப்புச் சட்ட வரைவு அல்ல.

நாடாளுமன்றம் மற்றும் பொதுமக்களின் கருத்தை அறியவே அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் அரசியலமைப்புச் சட்டவாக்க சபை திருத்தங்களுடன் அரசியலமைப்புச் சட்ட வரவை சமர்ப்பிக்கும் எனவும் லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers