நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது

Report Print Kamel Kamel in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பயணம் செய்த வாகனம் விபத்துக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த விபத்து நேற்று மாலை புத்தளம் - வனாத்தவில்லு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சனத் நிசாந்த, தற்பொழுது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த நிலையில் கட்சி நிகழ்வு ஒன்றில் பங்கேற்று திரும்பிய போது நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த மற்றும் அவரது பாரியார் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், விபத்தில் சிக்கிய சாரதி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தினால் நாடாளுமன்ற உறுப்பினருக்கோ, அவரது பாரியாருக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.