சந்திரிக்கா இப்பொழுது ஒர் செல்லாக்காசு: எஸ்.எம்.சந்திரசேன

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஓர் செல்லாக்காசு என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

அமைச்சர்களின் எண்ணிக்கை பூர்த்தியாகியுள்ளது, எந்தவொருவரும் எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதில்லை.

அமைச்சுப் பதவி இல்லாது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள மாட்டார்கள்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஓர் செல்லக்காசு. அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதால் எவ்வித பாதிப்பும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.