ஒற்றையாட்சி என்ற வார்த்தையை பயன்படுத்த இணங்கியுள்ள த.தே.கூட்டமைப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான விடயத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய “ஒருமித்த நாடு” என்ற வார்த்தைக்கு பதிலாக “ஒற்றையாட்சி” என்ற வார்த்தையை பயன்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான யோசனையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒற்றையாட்சி என்ற வார்த்தை மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் இதுவரை இறுதி இணக்கத்திற்கு வரவில்லை எனவும் யோசனை மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியலமைப்புச் சட்ட யோசனையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.