ஜனாதிபதி வேட்பாளர் ஆசையை வெளிப்படுத்திய ஐதேகவின் முன்னாள் பொதுச் செயலாளர்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

குருணாகலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சில நபர்கள், தற்போது அரசியல் நிகழ்ச்சி நிரலை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, தனிப்பட்ட நிலைப்பாட்டுக்கு அமைய செயற்படுவது பெரிய குறைபாடு.

பொது வேட்பாளராக போட்டியிட எனக்குத் தேவையான அளவு அனுபவங்கள் இருக்கின்றன. இதனால், மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் என்ன செய்ய வேண்டும் என்ற உணர்வு எனக்குள்ளது.

அத்துடன் அரசியலில் காணப்படும் மோதல்கள், நல்லவை கெட்டவை தொடர்பாகவும் எனக்கு அனுபவங்கள் உள்ளன. இதனால்,எந்த சந்தர்ப்பமாக இருந்தாலும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் இல்லை எனவும் அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.