தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள இழப்பு! சுமந்திரன் சம்பந்தனின் தற்போதைய தேவை?

Report Print Steephen Steephen in அரசியல்
291Shares

கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னிடம் இருந்த வாக்கு வங்கியில் 35 சத வீதத்தை இழந்ததாகவும் இழந்த வாக்கு வங்கியை மீண்டும் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு இழந்த வாக்கு வங்கியை எப்படியாவது மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. இதுவே அவர்களின் ஒரே நோக்கம்.

ஒரே இரவில் இந்த அரசாங்கத்தை அழிக்க முடியும் என சுமந்திரன் தெரிவித்திருந்தார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி அரசாங்கத்தினால், எந்த சட்டமூலத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என்று சுமந்திரன் நேற்று கூறியிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி ஒரு சிறிய சட்டமூலத்தை கூட தற்போதைய அரசாங்கத்திற்கு நிறைவேற்ற முடியாது. அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்ட வியூகங்களை குப்பை கூடையில் போட்டுள்ளனர் எனவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.