இலங்கையின் நிலை குறித்து தகவல் வெளியிட்ட பொலிஸ்மா அதிபர்

Report Print Steephen Steephen in அரசியல்

உலகில் உள்ள ஏனைய நாடுகள் அபிவிருத்தியில் முன்னேற்றமடைந்து வரும் நிலையில், இலங்கை எந்த இடத்தில் இருக்கின்றது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

புதியவற்றை பரீட்சித்து பார்த்து முன்னேற வேண்டும். புதியப் புதிய விடயங்களை பரீட்சித்து பார்த்த பல உலக நாடுகள் முன்னேறியுள்ளன.

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இலங்கையை பார்த்து முன்னேறிய நாடுகள். எனினும் இலங்கை இன்னும் இருந்த இடத்திலேயே இருக்கின்றது எனவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.