சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய வெளிநாட்டவர் விளக்கமறியலில்

Report Print Steephen Steephen in அரசியல்

பாடசாலை மாணவனான 7 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ரஷ்யா பிரஜை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ரஷ்ய பிரஜை இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மேலதிக நீதவான் பவித்ரா சஞ்ஜீவனி பத்திரன உத்தரவிட்டுள்ளார்.

சிறுவன் தனது இரண்டு நண்பர்களுடன் வீட்டுக்கு எதிரில் சைக்கிள் ஓட்டி விளையாட்டிக்கொண்டிருந்த போது, சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த சந்தேக நபர் தனது சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார்.

இதன் பின்னர் சிறுவனை காணாது அவரது தாயும் அயலவர்கள் தேடிய போது சிறுவன் கடற்கரையில் அழுதுக்கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ரஷ்ய பிரஜையுடன் சிறுவன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.