ஜனாதிபதி பதவியை ஒழித்தல் சிறப்பு! குமார வெல்கம

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி பதவியை தான் விரும்பவில்லை எனவும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

மில்லனிய கல்பான புராண ராஜமஹா விகாரையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் சில இடங்களில் ஆயுதங்களை கையில் எடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளமை சம்பந்தமாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெல்கம, முப்படையினர் மற்றும் பொலிஸார் என சுமார் 6 லட்சம் பேர் இருக்கின்றனர். பாதாள உலகத்தினர் ஒரு சிறிய தொகை. படையினரால் அவர்களை அடக்க முடியும்.

எனினும் இந்த சிறிய தொகையினரில் பலர் அரசியல்வாதிகளுடன் இருக்கின்றனர். இதனால், அவர்களை பிடிப்பது கடினம். எவ்வாறாயினும் இந்த நிலைமையை முடிவுக்கு கொண்டு வர முடியும். அதனை செய்ய எந்த நேரத்திலும் நான் தயார் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனாதிபதி பதவியை தான் விரும்பவில்லை எனவும் ஜனாதிபதிக்கு அதிகளவான அதிகாரங்கள் தேவையில்லை எனவும் அந்த அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்க வேண்டும் எனவும் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அன்று தொட்டு இன்று வரை இருந்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.