நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக ஐ.தே.கட்சியின் தலைவர்கள் உயிர்களை தியாகம் செய்தனர்!

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதத்திற்கு உரிய இடத்தை அவ்வாறே பாதுகாக்க ஐக்கிய தேசியக் கட்சி அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காகவும் மக்களின் பாதுகாப்புக்காகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பல தலைவர்கள் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளனர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ருவான்வெல்ல தொகுதியில் அபிவிருத்திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு காலத்தில் தன்னை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல போகின்றனர் என்று ஒருவர் கூறினார். மின்சார நாற்காலியில் இருந்து தன்னை காப்பாற்ற தனக்கு வாக்களிக்குமாறு கோரினார்.

இறுதியில் மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்லவிருந்தவர்களை ரணில் விக்ரமசிங்க காப்பாற்ற நேர்ந்தது. அதற்கு பின்னர் வெளிநாடு செல்ல முடியாது தம்மை கைது செய்வார்கள் எனக் கூறினார்.

ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அதில் இருந்து அவரை காப்பாற்றினார்.

இந்த நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வர தற்போது புதிய பூச்சாண்டியை தேடுகின்றனர்.

ஒப்பந்தகாரர்கள், கொள்ளை வியாபாரிகளின் தேவைக்காகவே இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சித்து வருகின்றனர்.

இதுவரை காலமும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் மக்களின் பாதுகாப்புக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பல தலைவர்கள் தமது உயிர்களை தியாகம் செய்தனர். அதேபோல் ஆயிரக்கணக்கான ஐக்கிய தேசியக் கட்சியினரும் தமது உயிர்களை தியாகம் செய்தனர்.

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி உயிரை அர்ப்பணித்து செயற்படும்” எனவும் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.