மரண தண்டனை என்ற முடிவில் மாற்றமில்லை: மைத்திரி அதிரடி

Report Print Steephen Steephen in அரசியல்

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடந்த நான்கு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் புதிய தோற்றத்தில் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று அரசாங்கம் எடுத்த முடிவில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தை அறிவித்து, முல்லைதீவு முள்ளியவளை வித்தியானந்தா பாடசாலையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட திட்டமிட்ட குற்றச் செயல்கள் பற்றி முறைப்பாடு செய்ய 1984 என்ற கட்டணமில்லா தொலைபேசி அழைப்பு இலக்கத்தையும் ஜனாதிபதி அறிமுகப்படுத்தியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, எனது கோரிக்கைக்கு அமைய இலங்கையில் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் கடத்தலை அடக்க பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் உதவி கிடைத்துள்ளது.

உதவிகளை வழங்குவது தொடர்பான விடயங்களை ஆராய பிலிப்பைன்ஸ் நாட்டின் விசேட குழு விரைவில் இலங்கை வரவுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாடு போதைப் பொருளால் அழிந்து போன நாடாக இருந்தது. அந்நாட்டின் ஜனாதிபதியின் வேலைத்திட்டம் காரணமாக தற்போது பிலிப்பைன்ஸ் அந்த சவாலில் வெற்றி பெற்றுள்ளது.

போதைப் பொருளை ஒழிக்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கையாண்ட நடவடிக்கையை நான் கையாள போவதில்லை என்றாலும் சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அஞ்சி போதைப் பொருள் வியாபாரிகளுக்கு எதிராக டிடுக்கப்படும் கடுமையான தீர்மானங்களை மாற்றிக்கொள்ள போவதில்லை.

போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு எதிர்த்து சில மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்த போதிலும் போதைப் பொருட்களால் நாட்டுக்கும், மக்களுக்கும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் ஏற்படும் அழிவு பற்றி அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த அழிக்கு அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும்.

போதைப் பொருள் கடத்தல்கார்கள் தொடர்பாக மட்டுமல்லாது, அதன் பின்னணியில் இருக்கு ஏனைய தரப்பினர் பற்றி தகவல்களை நாட்டுக்கு வெளியிட எதிர்பார்த்துள்ளேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.