அமைச்சரவை இன்று கூடுகின்றது! அதிரடிகாட்ட மைத்திரி தயார் நிலையில்

Report Print Murali Murali in அரசியல்
278Shares

வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், சில அதிரடி நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்ககூடம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பத்திரமொன்று முன்வைக்கப்படவுள்ளது.

இதன்படி மூன்று மாகாணசபைகளை கலைத்து ஒரே நாளில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரமே ஜனாதிபதியால் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒன்பது மாகாண சபைகளுக்கும், ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு வசதியாகவே, தற்போது, செயற்பாட்டு நிலையில் உள்ள, தென் மாகாண சபை, ஊவா மாகாண சபை, மேல் மாகாண சபை ஆகியவற்றைக் கலைக்க, ஜனாதிபதி அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.

இது தொடர்பான ஆவணத்தில் அவர், பிலிப்பைன்ஸ் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னரே கையெழுத்திட்டு விட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதம், ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.