மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரால் பல பெண்களுக்கு ஏற்பட்ட அவல நிலை

Report Print Vethu Vethu in அரசியல்
898Shares

திருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார்.

மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம் கடந்த மாதம் பிரம்மாண்டமாக திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் தன்னுடன் 9 வருடங்கள் சட்டரீதியாக திருமணம் செய்து வாழ்ந்த நிலையில், மற்றுமொரு பெண்ணை திருமணம் செய்வது எப்படி என பெண் ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

கிரிஸ் மதுபாஷினி டி சொய்ஸா என்ற பெண்ணே இவ்வாறு வினவியுள்ளார்.

திலும் அமுனுகம் கடந்த மாதம் 18ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த நிலையில் அவர்களின் திருமண அழைப்பிதலுக்கு பதிலளிக்கும் வகையில் குறித்த பெண் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அனைத்து செயலுக்கும் எதிர் செயல் உள்ளதாக அந்த பெண் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கெவின் என்ற தனது மகனின் புகைப்படத்தையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.