கோத்தபாயவுக்கு எதிராக களமிறக்கப்படும் ஞானசார தேரர்

Report Print Vethu Vethu in அரசியல்
1029Shares

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி பொது மன்னிப்பில் ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தாய் நாட்டுக்காக இராணுவம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஆளுநர் அசாத் சாலி தலையிடுவது மிகவும் சந்தேகத்திற்குரிய விடயமாக உள்ளதென அதன் ஏற்பாட்டாளர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரை விடுதலை செய்யும் நடவடிக்கையினை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏதாவது ஒரு வகையில் ஞானசார தேரருக்கு விடுதலை வழங்கினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்சவுக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளை இல்லாமல் செய்வதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.