சவுதி அரேபிய தூதுவர் குழு மட்டக்களப்பிற்கு விஜயம்

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

சவுதி நாட்டு அரேபிய தூதுவர் குழுவொன்று மட்டக்களப்பிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாவின் அழைப்பிற்கமைய குறித்த குழு இன்று விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் அப்துல் நாஸிர் உவைல் அல் ஹாரிதி தலைமையிலான உயர் மட்ட குழுவினர் விஷேட விமானம் மூலம் மட்டக்களப்பிற்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த விஜயத்தின் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள கணவனை இழந்த பெண்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், கிழக்கு மாகாணத்தின் கல்வி, சுகாதாரம், மீன்பிடி துறைகளை அபிவிருத்தி செய்தல் போன்ற விடயங்கள் இந்த விஜயத்தின் நோக்கங்களாக அமைந்துள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா பதவியேற்றதையடுத்து அனைத்து இஸ்லாமிய தூதுவர்களும் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.