தமிழர் என்ற வகையில் எமக்கு மதிப்பாக இருக்கிறது! வடக்கின் புதிய ஆளுநர்

Report Print Gokulan Gokulan in அரசியல்
139Shares

விழுந்து போன ஒரு தேசத்தின் அடி விழிப்பில் இருந்து கட்டாய காலம் எம்மை விட்டு விளக்குகின்றது என வட மாகாண ஆளுநர் சுரேஷ் ராகவன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட முள்ளியவலை வித்தியானந்தா கல்லூரியிற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விழுந்து விட்ட கலாசசாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்வது என்பது எமது தற்போதைய முதல் கடமையாக இருக்கின்றது. தமிழர் என்ற ரீதியிலே நாம் வாழ்வது எப்படி வாழ வேண்டியது எப்படி என்று எங்களுக்கு திருமலையும் திருக்குரலும் ஒன்றாக சொல்லி இருக்கின்றது.

ஆகையினாலேதான் நாங்கள் வாழகூடிய விதத்திலே வாழ வேண்டும் என்பது எங்களுக்கு கட்டளையாக இருக்கின்றது. அதிமேதகு

ஜனாதிபதியின் கண்ணோட்டத்தின் கீழ் இலங்கை போதை அற்ற ஒரு நாடு, போதைப்பொருள் அற்ற நாடு என்ற முக்கிய கொள்கைக்காக நாங்கள் எங்களது பணிகளை செய்து கொண்டுடிருக்கின்றோம்.

இங்கே எமது முல்லைத்தீவு மாவட்டத்திலே போதைபொருள் தடுப்பு வாரத்தை ஆரம்பித்து வைப்பதில் தமிழர் என்ற வகையில் எமக்கு மதிப்பாக இருக்கின்றது.

எமது நாட்டின் ஜனாதிபதி ஒரு புறம் முஸ்லிம் சகோதரனையும் மறு புறம் தமிழ் சகோதரனையும் வைத்திருப்பது எமது நாட்டை குறித்து சொல்லகூடிய சொல்ல வேண்டிய சில உண்மையான விடயங்களை அரசியல் ரீதியாக தெரிவிக்கின்றேன் என நான் நினைக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.