நான் பதிலளிக்க மாட்டேன்: இரா.சம்பந்தன் மறுப்பு

Report Print Rakesh in அரசியல்
1328Shares

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழுவின் அறிக்கையை ரெலோ கட்சியினர் நிராகரித்துள்ளமை குறித்து கருத்துக்கூற தாம் விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அது அவர்களின் தனிப்பட்ட முடிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அடியோடு நிராகரித்துள்ளமை தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் இது குறித்து தங்கள் நிலைப்பாடு என்ன என்று வினவிய போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.