ரணில் குறித்து மகிந்தவிடம் சொல்லப்பட்ட தகவல்! பிரார்த்தனை செய்யுமாறு பணித்த மகிந்த

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
389Shares

விரைவில் நாடாளுமன்றத்தின் இரண்டாம் மாடியில் அமைந்திருக்கும் பிரதமர் அலுவலகத்திற்குச் செல்ல பிராத்தியுங்கள் என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொடகுதியில் அமைந்துள்ள எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வின் பின்னர் உறுப்பினர்களிடையே உரையாடல் இடம்பெற்றது. இதன்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் தொங்கவிடப்பட்டிருந்த படங்களை பார்த்து, ரணில் விக்ரமசிங்கவின் 4 படங்கள் இருக்கின்றன. விரைவில் 5 ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும்.

நாடாளுமன்ற வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்களின் புகைப்படங்களுடன் அந்த காலப்பகுதியும் தெரிவிக்கப்பட்டு எதிர்க் கட்சித்தலைவர் காரியாலயத்தில் தொங்கவிடப்பட்டிருந்த படங்களை பார்த்து, ரணில் விக்ரமசிங்கவின் 4 படங்கள் இருக்கின்றன. விரைவில் 5 ஆவது படத்தையும் தொங்கவிட வைக்கவேண்டும் என்றார்.

இந்நிலையில் உதய கம்பன்பிலவின் இக் கருத்துப் பதிலளித்த மகிந்த ராஜபக்ச, அது விரைவில் இடம்பெறும். அதற்கு தேவையான வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொள்ளவேண்டும். விரைவில் நாடாளுமன்றத்தின் இரண்டாம் மாடியில் அமைந்திருக்கும் பிரதமர் அலுவலகத்திற்குச் செல்ல பிராத்தியுங்கள் என்றார்.

இதேவேளை, விரைவில் இந்த காரியாலயத்தில் இருந்து வெளியேற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.