வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த விஜயம் இன்று நண்பகல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ள நிலையில் மாகாண சபையின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அனைத்தும் ஆளுநருடைய நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயற்பட்டு வருகின்றது.
இந் நிலையில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரின் அமைச்சு அலுவலகத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் பணிக்குழாமினருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு தேவையான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.
அத்தோடு நாளை புதன் கிழமை ஆளுநர் செயலகத்தில் இடம்பெறவிருந்த“பொதுமக்கள் தினத்தினை“ முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.