மைத்திரி வழங்கியுள்ள பணிப்புரை

Report Print Ajith Ajith in அரசியல்

படைப்புழுவை இல்லாதொழிப்பதற்காக யுத்தக் காலத்தில் கடமையாற்றியதை போன்று, அர்ப்பணிப்புடனும், கடமையாற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள படைப்புழுவை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகள் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே, அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்காக குறிப்பிட்ட கால எல்லையொன்றை நிர்ணயித்து, அந்தக் காலப் பகுதிக்குள் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

அத்துடன், அரச மற்றும் தனியார் துறைகளை ஒன்றிணைத்துக்கொண்டு, கிருமிநாசினி பயன்பாட்டு திட்டமொன்றையும் செயற்படுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய, படைப்புழுவை இல்லாதொழிக்கும் நோக்குடன் ஜனாதிபதி செயலணியொன்றையும் ஸ்தாபிக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.