ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச ஒருவரே போட்டியிடுவார் அதில் மாற்றமில்லை

Report Print Kamel Kamel in அரசியல்
137Shares

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் சார்பல் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே போட்டியிடுவார் என பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வெலிகந்த கரபொல பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

அரசாங்கத்தின் சூழ்ச்சித் திட்டங்களினால் மக்களின் அதிகாரங்கள் வாக்கு பலங்கள் என்பன நாள்தோறும் வீழ்ச்சியடைகின்றது.

யார் என்ன சொன்னாலும் இன்று பெரும்பான்மையானவர்கள் மஹிந்த ராஜபக்சவுடனேயே இருக்கின்றார்கள்.

இதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அல்லது அவரினால் பரிந்துரைக்கப்படும் ஒருவரை வெற்றியீட்டச் செய்வோம். அதில் மாற்றமில்லை.

மலர்மொட்டு ஆட்சி பீடம் ஏறியதும் ஊழல் மோசடிகள் அனைத்தும் இல்லாதொழிக்கப்படும் என ரொசான் ரனசிங்க தெரிவித்துள்ளார்.