ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான தகவல்!!

Report Print Murali Murali in அரசியல்
471Shares

நாட்டில் முதலில் எந்தத் தேர்தல் இடம்பெறும் என்பதைப் பொருத்துத்தான் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரைத் தீர்மானிக்கவுள்ளோம் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

பிரதி அமைச்சர் நலின் பண்டார இதனை தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் இதன் போது கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரின் பெயர்கள் பேசப்படுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்தும் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் பல்வேறு விதமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக ரணில்? சஜித்? கரு? ஆகிய மூவரில் யார் தீர்மானிக்கப்படும் என வினவியதற்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.