சேனாவை விட மோசமான பூச்சி நாடாளுமன்றத்தில்: சரத் பொன்சேகா

Report Print Steephen Steephen in அரசியல்

மேலதிக அமைச்சர்களை நியமிப்பது சம்பந்தமாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்றை நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பேலியகொடையில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு அது நிராகரிக்கப்பட்டார் உயர் நீதிமன்றத்திற்கு செல்ல நேரிடும்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய பிரதமர் அமைச்சர்களை நியமிக்க முடியும். ஜனாதிபதியின் கருத்து முரண்பாடுகள் காரணமாக எனக்கு அமைச்சு பதவியை வழங்குவது மறுக்கப்பட்டது.

30 அமைச்சர்களுக்கு மேலதிகமாக அமைச்சர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2015 ஆம் ஜனாதிபதியாக தெரிவான தற்போதைய ஜனாதிபதிக்கு கடந்த காலம் மறந்து விட்டது எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை நாட்டில் சேனா என்ற கம்பளி பூச்சி காரணமாக பல அழிவுகள் ஏற்பட்டுள்ளன. எனினும் சேனா கம்பளி பூச்சியை விட மோசமான பூச்சி நாடாளுமன்றத்தில் இருப்பதாக பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers