ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றங்கள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நேற்றைய தினம் கட்சியின் தலைமையகம் சிரிகொத்தவில் நடைபெற்றது.
இதன்போது எதிர்வரும் ஓராண்டு காலத்திற்கு கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க நீடிப்பார் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அதிகாரிகள் மீளவும் அதே பதவிகளில் அமர்த்தப்பட்டதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பதவிக்கு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் திட்டமிட்டவாறு நடைபெறும் என கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ள அதேவேளை, மாகாணசபை தேர்தல் துரித கதியில் நடத்தப்படாது என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.