இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு! சம்பந்தனின் அவசர கோரிக்கை

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கை இராணுவத்திற்கு எதிரான போர் குற்றச்சாட்டு தொடர்பான ஜெனீவா யோசனையை முழுமையாக செயற்படுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தின் பிரதானி பர்குஸ் அவுல்ட் என்பவரிடம் சம்பந்தன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையின் அதிகாரத்தை பிரிக்கும் நடவடிக்கை உரிய முறையில் செயற்படுத்தப்பட வேண்டும். எனினும் சில அரசியல்வாதிகள் அதற்கு அச்சமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்தை பிரிக்கும் செயற்பாடு சரி என்றால் தமிழ் மக்கள் அதனை ஏற்றுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.