பிரித்தானிய உயர்ஸ்தானிகரை அழைத்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய இலங்கை

Report Print Kamel Kamel in அரசியல்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸை அழைத்து வெளிவிவகார அமைச்சு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி வரும் பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவிற்கு, பிரித்தானிய நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளமை குறித்து இவ்வாறு எதிர்ப்பும் அதிருப்தியும் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவினாத் ஆரியசிங்க, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் டோரிஸிடம் அதிகாரபூர்வமாக எதிர்ப்பை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளதாக நம்பத் தகுந்த ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி வரும் பிரியன்கா பெர்னாண்டோவிற்கு ராஜதந்திர சிறப்புரிமை உண்டு எனவும் அவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுப்பது நியாயமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

1961ஆம் ஆண்டு வியன்னா ராஜதந்திர பிரகடனத்தின் அடிப்படையில், உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவை பிரித்தானிய நீதிமன்றில் முன்னியலையாகுமாறு அழைப்பாணை பிறப்பித்ததில் ராஜதந்திர சிறப்புரிமைகளை மீறும் செயல் என ரவினாத் ஆரியசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.