நாடாளுமன்ற நியதிகளை ஜனாதிபதிக்கு நினைவூட்டுவதற்கு தீர்மானம்

Report Print Kamel Kamel in அரசியல்

நாடாளுமன்ற நியதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நினைவூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பின் 19ஆம் திருத்த சட்டத்தின் பிரகாரம் நாட்டின் ஜனாதிபதி குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒரு தடவையேனும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டுமென நினைவூட்ட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல, ஜனாதிபதிக்கு இந்த நினைவூட்டலை செய்ய உள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆகஸ்ட் மாதத்தின் பின் நாடாளுமன்றில் பிரசன்னமாகவில்லை எனவும், இது அரசியல் அமைப்பு விதி மீறல் எனவும் ஜே.வி.பி கட்சி நேற்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்லவிடம், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி கோரியிருந்தார்.

இதன்போதே தாம் ஜனாதிபதிக்கு நினைவூட்ட நடவடிக்கை எடுப்பதாக லக்ஸ்மன் கிரியல்ல உறுதியளித்துள்ளார்.