அரசியல் கட்சிகளின் அழுத்தத்தினால் அகற்றப்பட்ட பதாதைகள் மீண்டும் அதே இடத்தில்

Report Print Theesan in அரசியல்

வவுனியா நகரின் முக்கிய சந்திகளில் அரசியல் முக்கியஸ்தர்களின் உருவம் பதிக்கப்பட்ட பதாதைகள் அகற்றப்பட்டு மீண்டும் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் அரசியவாதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து படங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகள் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் இப்பதாதைகள் நகரசபை தொழிலாளர்களால் அகற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அகற்றப்பட்ட பதாதைகள் இரவு 8 மணியளவில் நகரபை தொழிலாளர்களினால் திரும்பவும் அந்த இடங்களிலேயே மீண்டும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பணிகளுக்காக நகரசபை தொழிலாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நகரசபைக்கு பணம் வீண் விரையும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.