ஞானசாரருக்கு பொதுமன்னிப்பை ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி நாடு திரும்பியதும் முன்வைக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிடம் கருத்துரைத்துள்ள அவர், ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ராமாண்ய பீடம், தலதா மாளிகையின் நிலமே, கோட்டே ஶ்ரீகல்யாணி கமகீ தர்ம மகா சங்க, அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகாநாயக்கர் ஆகியோருக்கு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கோரிக்கை தொடர்பில் எந்த அதிகாரிகளுடனும் பேச்சு நடத்த அவசியம் இல்லை.

ஜனாதிபதி நாடு திரும்பியதும் ஜனாதிபதியுடன் இது தொடர்பில் பேசவுள்ளதாக காமினி ஜெயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

Latest Offers