அமெரிக்காவின் படைத்தளம் திருகோணமலையில்! இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ள விடயம்

Report Print Ajith Ajith in அரசியல்

அமெரிக்க படைகளை கிழக்கின் திருகோணமலையில் நிலை கொள்ள செய்வது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானநந்தாவின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவை தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல,

திருகோணமலையில் அமெரிக்காவின் படைத்தளத்தை அமைப்பது தொடர்பில் எவ்வித பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானநந்தா தெரிவித்தமை தொடர்பில் கருத்து வெளியிட்ட, லக்ஸ்மன் கிரியெல்ல, டக்‌ளஸ் தேவாநந்தா ஊடகங்களில் வெளியான தகவல்களை கொண்டே இந்த கேள்வியை தொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.