அடுத்த ஜனாதிபதி இவர் தான்! அமைச்சரொருவரின் தகவல்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்டாயம் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று மாலை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. எந்த பிரச்சினைகளும் ஏற்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தேவையான சந்தர்ப்பத்தில் தீர்மானிக்கப்படும்.

அத்துடன் மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை எனவும் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.