காலிக்கு கப்பல்துறை பிரதியமைச்சர் விஜயம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

காலி மாவட்டத்திற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கப்பல்துறை பிரதியமைச்சராக பதவியேற்ற நிலையில் முதல் முறையாக இன்றைய தினம் துறைமுகங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலை, ஒலுவில் துறைமுகங்களுக்கும் கடந்த வாரம் விஜயம் மேற்கொண்டு குறைபாடுகள் மற்றும் புதிய அபிவிருத்தி தொடர்பிலும் தற்போது ஆராய்ந்துள்ளார்.

தற்போது காலி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பிலும் வதிவிட முகாமையாளர் டீ.கே.ஜீ.எல்.ஹேமசந்ர உடன் பிரதியமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டு அங்கு உற்பத்தி செய்யப்படும் சீமெந்து பொருட்களையும் பார்வையிட்டுள்ளனர்.