ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசேட வர்த்தமானி! அமைச்சு பதவிகளில் திருத்தங்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு அமைய சமூக வலுவூட்டல் அமைச்சராக கடமையாற்றி வரும் தயா கமகேவுக்கு அந்த பொறுப்புடன் ஆரம்ப கைத்தொழில் அமைச்சு பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வரும் ரஞ்சித் அலுவிகாரவுக்கு மேலதிகமாக வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய விவகார இராஜாங்க அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் அவரது செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிட்டுள்ளார்.